/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சலுான் கடைக்குள் புகுந்த டிராக்டர் மோதி இருவர் காயம்
/
சலுான் கடைக்குள் புகுந்த டிராக்டர் மோதி இருவர் காயம்
சலுான் கடைக்குள் புகுந்த டிராக்டர் மோதி இருவர் காயம்
சலுான் கடைக்குள் புகுந்த டிராக்டர் மோதி இருவர் காயம்
ADDED : ஜூலை 08, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சுந்தர். இப் பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். சிந்துவம்பட்டியை சேர்ந்த பால்பாண்டிக்கு, சுந்தர் முடிவெட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சலுான் கடையை உடைத்து புகுந்து சுந்தர், பால்பாண்டி மீது மோதியது. காயமடைந்த இருவரும் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து ஏற்படுத்திய சில்வார்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் பிரபுவை, ஜெயமங்கலம் போலீசார் கைது செய்தனர்.