/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர் மீது பஸ் மோதல் பயணிகள் இருவர் காயம்
/
டூவீலர் மீது பஸ் மோதல் பயணிகள் இருவர் காயம்
ADDED : ஜூலை 13, 2025 12:33 AM
மூணாறு: கேரளா, எர்ணாகுளத்தைச் சேர்ந்த பிரயேஷ் 20, திருப்புணித்துறையைச் சேர்ந்த அபிராம் 16, ஆகியோர் ஒரு டூவீலரில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். பிரயேஷ் டூவீலரை ஓட்டினார். அவர்கள் நேற்று காலை வட்டவடைக்கு சென்றனர்.
எல்லப்பட்டி எஸ்டேட் பகுதிக்கு சென்ற போது எதிரே வட்டவடையில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற கேரள அரசு பஸ், டூவீலர் மீது பலமாக மோதியது.
அதில் தூக்கி வீசப்பட்ட பிரயேஷ், அபிராம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரயேஷ், எர்ணாகுளத்தில் தனியார் மருத்துவமனையில் அபிராம் ஆகியோர் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்

