/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தனியார் நிறுவனத்தில் சுவர் இடிந்து இருவர் பலி
/
தனியார் நிறுவனத்தில் சுவர் இடிந்து இருவர் பலி
ADDED : ஜன 05, 2025 12:44 AM
கிணத்துக்கடவு:கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே காணியாலம்பாளையத்தில், 'தியோஸ் வென்டியூர்ஸ்' என்ற குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது. இங்கு, பீஹாரை சேர்ந்த சன்னர்மஜித், 42, மேற்கு வங்கத்தை சேர்ந்த ரியாசன்சேக், 28, மற்ற தொழிலாளர்களுடன் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று மதியம், 80 அடி அகலம் மற்றும் 10 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவர் கட்டும் பணியில் அவர்கள் ஈடுபட்ட போது, அவர்கள் மீது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
நெகமம் போலீசார், இருவரின் சடலத்தை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், கட்டுமான பணி மேற்கொண்ட இடத்தில், முறையான பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்ததா, தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருந்தனரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

