/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சோளக் கதிர் ஏற்றி வந்த டிராக்டர் மீது மின்கம்பி உரசி இருவர் பலி
/
சோளக் கதிர் ஏற்றி வந்த டிராக்டர் மீது மின்கம்பி உரசி இருவர் பலி
சோளக் கதிர் ஏற்றி வந்த டிராக்டர் மீது மின்கம்பி உரசி இருவர் பலி
சோளக் கதிர் ஏற்றி வந்த டிராக்டர் மீது மின்கம்பி உரசி இருவர் பலி
ADDED : ஜன 19, 2024 11:32 PM

போடி:தேனி மாவட்டம் போடி அருகே கரட்டுப்பட்டியில் சோளக் கதிர்களை ஏற்றி வந்த டிராக்டர் மீது தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின் கம்பி உரசியதால் மின்சாரம் தாக்கி இருவர் பலியாயினர்.
கரட்டுப்பட்டியை சேர்ந்த டிரைவர் யுவராஜ் 21. சின்னப் பொட்டிபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி 28. இருவரும் நேற்று காலை கரட்டுப்பட்டியில் சொக்கநாத பாண்டியனுக்கு சொந்தமான தோட்டத்தில் அறுவடை செய்த சோளக் கதிர்களை டிராக்டரில் ஏற்றி வந்துள்ளனர்.
கதிர்கள் மீது பெருமாள்சாமி உட்கார்ந்து வந்துள்ளார். வழியில் தோட்டத்தில் தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின் கம்பி, டிராக்டர் மீது இருந்த இரும்பு கம்பி கூடை மீது உரசியது.
இதனால் மின்சாரம் பாய்ந்து தீ பிடித்ததில் அங்கு அமர்ந்திருந்த பெருமாள்சாமியை மின்சாரம் தாக்கியது. உடல் முழுவதும் கருகி பெருமாள்சாமி சம்பவ இடத்திலே இறந்தார்.
டிராக்டர் ஓட்டிய யுவராஜ் மீதும் மின்சாரம் தாக்கியதில் கீழே தூக்கி வீசப்பட்டார். போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். இதில் டிராக்டர் டயர்களும் கருகின. போலீசார் விசாரிக்கின்றனர்.