/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில விருதிற்கு இரு பள்ளிகள் தேர்வு
/
மாநில விருதிற்கு இரு பள்ளிகள் தேர்வு
ADDED : மார் 04, 2024 06:22 AM
தேனி: மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட 76 அரசுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தேனி மாவட்டத்தை சேர்ந்த வைகை அணை அரசு மேல்நிலைப்பள்ளி, அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்கள் வருகைப் பதிவு, அரசு நடத்திய வருவாய்வழித் தேர்வு, திறனறித்தேர்வு ஆகியவற்றில் மாணவர்கள் செயல்பாடு, இத்தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி விகிதம், பள்ளி துாய்மை உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் அரசுப்பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டத்தில் இருந்து 4 பள்ளிகள் தேர்வு செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டது. இதில் 2 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன' என்றனர்.

