ADDED : ஜன 02, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் உத்தமபுரம் பகுதியில் வசிப்பவர் தங்கம் 52, கொத்தனாராக வேலை செய்யும் இவர் நேற்று முன்தினம் காலை கம்பம் மெயின்ரோட்டில் காந்தி சிலையில் இருந்து தனது டூவீலரில் வீட்டிற்கு சென்றார்.
அப்போது, அரசமரம் அருகே குமுளியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில், தங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

