ADDED : ஏப் 08, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட சத்யா நகர் கூலித் தொழிலாளி சிவசக்தி 32. நேற்று தேனியில் இருந்து தும்மக்குண்டு செல்லும் போது கட்டுப்பாடு இழந்த டூவீலர் கண்டமனுார் அருகே ரோட்டின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிவசக்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.
டூவீலரில் ஹெல்மெட் வைத்திருந்தும், அதனை தலையில் அணியாமல் இருந்ததால் தலைக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கண்டமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

