ADDED : நவ 04, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கம்பம் - கோம்பை ரோடு ஆட்டோ டிரைவர் வினித் 38. இவர் நவ.1ல் பயணிகளை ஏற்றி தேனி வந்து, கம்பம் திரும்பினார். பைபாஸ் ரோடு வீரபாண்டி சந்திப்பு அருகே சென்றார்.
அப்போது வீரபாண்டி கிழக்குத் தெரு குமாரின் 16 வயது மகன் ஓட்டிய டூவீலர், ஆட்டோவில் மோதி விபத்து நடந்தது. இதில் ஆட்டோ இடது புற பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆட்டோ டிரைவர், பயணிகள் காயமடைந்தனர். டூவீலரில் வந்த 16 வயது சிறுவன் உட்பட மூவரும் காயமடைந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். வீரபாண்டி போலீசார் 16 வயது சிறுவன் உட்பட மூவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.