/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் அதிக ஒலியுடன் டூவீலர்கள் ஓட்டி இடையூறு
/
தேனியில் அதிக ஒலியுடன் டூவீலர்கள் ஓட்டி இடையூறு
ADDED : செப் 20, 2025 11:51 PM
தேனி: தேனி நகராட்சியில் பெரியகுளம், மதுரை ரோட்டில் காலை, மாலையில் அதிவேகமாகவும், அச்சுறுத்தும் ஒலி எழுப்பி டூவீலர்களை ஓட்டிச்ெசல்லும் இளைஞர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றனர்.
இந்நகராட்சியில் பெரியகுளம் ரோடு, கம்பம் ரோடு, மதுரை ரோடுகளில் 'பீக் ஹவர்ஸ்' என்றழைக்கூடிய காலை, மாலையில் ரேஸ் டூவீலர்களை அதிவேகமாக ஓட்டிவாறு அச்சுறுத்தும் வகையில் ஒலி எழுப்பியபடி செல்கின்றனர். இதனால் ரோட்டில் செல்லும் பிற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இளைஞர்கள் இந்த பயணம் இரவு 9 மணிவரை திடீர், திடீரென நகருக்குள் தொடர்ந்து நான்கைந்து டூவீலர்கள் அடுத்தடுத்து வித்தியாசமான ஒலி எழுப்பியவாறு செல்வது தொடர்கிறது. வித்தியாசமான ஒலி எழுப்பும் ஹாரன்களை இணைத்து ரேஸ்சில் செல்வது போன்று ஓட்டுகின்றனர்.
இந்த விதிமீறலை போலீசார் கண்டும், காணாதது போல் செயல்படுகின்றனர். இவர்கள் மீது தொடர்ந்து கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ளனர்.