/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் டூவீலர் விபத்தில் தொழிலாளர்கள் இருவர் பலி
/
தேனியில் டூவீலர் விபத்தில் தொழிலாளர்கள் இருவர் பலி
தேனியில் டூவீலர் விபத்தில் தொழிலாளர்கள் இருவர் பலி
தேனியில் டூவீலர் விபத்தில் தொழிலாளர்கள் இருவர் பலி
ADDED : மார் 20, 2025 02:30 AM

தேனி:தேனியில் பாலம் வேலை நடைபெறும் பகுதியில் நடந்த டூவீலர் விபத்தில் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் அபிஸ் அமலன், பாரதிராஜா 32, உயிரிழந்தனர்.
பெரியகுளம் தாலுகா தாமரைகுளம் தாசில்தார் நகர் அபிஸ் அமலன் 22, சேதுராமன், கார்த்திக், சின்னதுரை ஆகியோர் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சையில் இருந்த நண்பரின் தந்தையை பார்க்க இரு டூவீலர்களில் நேற்று முன்தினம் இரவு சென்று விட்டு திரும்பினர்.
தேனி- மதுரை ரோட்டில் சிப்காட் அருகே ரயில்வே மேம்பால பணி நடக்கிறது. அங்கு வந்த போது எதிரே ஆண்டிபட்டி நாச்சியார்புரம் பாரதிராஜா ஓட்டி வந்த டூவீலர் அபிஸ் அமலன் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது.
இந்த விபத்தில் அபிஸ் அமலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சேதுராமன், பாரதிராஜா தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.