/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதை மாத்திரை விற்பனை வாலிபர்கள் இருவர் கைது
/
போதை மாத்திரை விற்பனை வாலிபர்கள் இருவர் கைது
ADDED : ஆக 22, 2025 11:31 PM
தேனி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 54 போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் பெற்று பயன்படுத்தி விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதி மீனாட்சி சுந்தரநாடார் தெரு கோகுலகிருஷ்ணன் 21, மணியாரம்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்த நவீன் 24, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆண்டிபட்டி எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலான போலீசார் அங்குள்ள குமாரபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். 2 டூவீலர்களில் கோகுலகிருஷ்ணன், நவீன் வந்தனர்.
போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில் தடை செய்யப்பட்ட போதை தரும் 54 மாத்திரைகள்இருந்தன. அவற்றையும், 2 அலைபேசிகள், ரூ.14 ஆயிரத்து 950, விற்பனைக்கு பயன்படுத்திய 2 டூவீலர்களை போலீசார் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள பெரியகுளத்தை சேர்ந்த கோகுலை தேடி வருகின்றனர்.