/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ்சில் 5 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தவர் கைது
/
பஸ்சில் 5 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தவர் கைது
ADDED : ஆக 22, 2025 11:29 PM
தேனி:- தேனி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பாக்கியம், சிறப்பு எஸ்.ஐ., விஜய்ஆனந்த் தலைமையிலான போலீசார் தேவதானப்பட்டி காட்ரோடு பிரிவில் ரோந்து சென்றனர். அரசு பஸ்சில் வந்த தேனி காமராஜர் லைன் அர்ஜூனனை 52, சோதனை செய்தனர்.
அவர் ரூ.1.08 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ 400 கிராம் கஞ்சாவை பையில் பதுக்கி வைத்திருந்தார். அவரை கைது செய்துகஞ்சாவை பறிமுதல் செய்தனர். அர்ஜூனன் மீது தேனி, போதைப் பொருட்கள் நுண்ணறிவுப் போலீசில் கஞ்சா கடத்தி விற்பனை செய்வது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்ஸ்பெக்டர் கூறுகையில் '' அர்ஜூனன் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து தேனி மாவட்டத்தில் சில்லரை வியாபாரிகளிடம் கொடுத்து, பள்ளி, கல்லுாரிகள் அருகே மாணவர்களிடம் விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய ஆந்திர மொத்த வியாபாரியும் கைது செய்யப்படுவார்'' என்றார்.