/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு முடிவுகள் வெளியீடு
/
தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு முடிவுகள் வெளியீடு
தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு முடிவுகள் வெளியீடு
தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு முடிவுகள் வெளியீடு
ADDED : நவ 08, 2024 02:28 AM
போடி:தமிழக அளவில் அரசு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு முடிவுகள் வெளியாகின.
ஒவ்வொரு ஆண்டும் பிப்., ஆக., மாதங்களில் இளநிலை, முதுநிலை தமிழ், ஆங்கிலம் தட்டச்சர், (டைப்ரைட்டிங்), சுருக்கெழுத்தர் (ஷார்ட் ஹேண்ட்), சி.ஓ.ஏ., (கணினி) தேர்வுகள் நடைபெறும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதனால் ஆண்டு தோறும் இத் தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆகஸ்டில் நடந்த தேர்வுகளின் முடிவுகள் நேற்று வெளியாகின.
தட்டச்சு இளநிலை ஆங்கிலத்தில் 69.85 சதவீதமும், தமிழில் 78.88 சதவீதமும், தட்டச்சு முதுநிலை ஆங்கிலம் 58.85 சதவீதமும், தமிழில் 67.96 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சுருக்கெழுத்து ஆங்கிலம் இளநிலை தேர்வில் 10.53 சதவீதமும், தமிழ் இளநிலை தேர்வில் 33.24 சதவீதமும், சுருக்கெழுத்து முதுநிலை ஆங்கிலம் 13.05 சதவீதமும், தமிழில் 45 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்டு தோறும் சுருக்கெழுத்து தேர்வுக்கான தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது.
சுருக்கெழுத்து ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: அரசு அங்கீகாரம் பெற்ற சுருக்கெழுத்து பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பயிலாமல் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுவதால் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது என்றார்.