ADDED : ஏப் 14, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் கம்மவார் உறவின்முறை சார்பில் தெலுங்கு ஆண்டு புத்தாண்டு யுகாதி, கல்வி திருநாள் விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சிறப்பு விருந்தினராக தேனி கவிதாலயா கல்வி அறக்கட்டளை தலைவர் சரவணன் பங்கேற்று 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். வீரப்பன் - சரஸ்வதி தம்பதியினர் ரொக்கப்பரிசு வழங்கினர். சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. யுகாதி விருந்து அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆண்டிபட்டி கம்மவார் உறவின்முறைத் தலைவர் பாலமுருகன், செயலாளர் மோகன்தாஸ், பொருளாளர் நாகராஜன் உட்பட விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

