/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காதலன் இறந்த துக்கம் தாங்காமல் காதலி துாக்கிட்டு தற்கொலை
/
காதலன் இறந்த துக்கம் தாங்காமல் காதலி துாக்கிட்டு தற்கொலை
காதலன் இறந்த துக்கம் தாங்காமல் காதலி துாக்கிட்டு தற்கொலை
காதலன் இறந்த துக்கம் தாங்காமல் காதலி துாக்கிட்டு தற்கொலை
ADDED : டிச 22, 2024 02:35 AM
போடி:தேனி மாவட்டம் போடி வெண்ணிமலைத் தெருவை சேர்ந்தவர் டிரைவர் பால்ராஜ். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு இரண்டு மகள்கள்.
மூத்த மகள் தாரணி 20,தேனியில் தனியார் கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்தார். இவர் கரூரை சேர்ந்த திவாகர் என்பவருடன் இன்ஸ்ட்ராகிராமில் அறிமுகமாகி காதலித்துள்ளார். இந்நிலையில் இரண்டு மாதத்திற்கு முன் திவாகர் விபத்தில் இறந்தார்.
இதையறிந்த தாரணி வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரை காப்பாற்றி தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் சேர்த்து, சிகிச்சை பெற்று வீட்டில் இருந்துள்ளார்.
அதன் பின் தாரணியை 15 நாட்களுக்கு முன் போடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
அங்கு மன அழுத்தத்தில் இருந்த தாரணி நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.