/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'சர்வர்' பிரச்னையால் வரி வசூலிக்க முடியாமல் தவிப்பு! ஊராட்சிகளில் சான்று பெற முடியாமல் மக்கள் அவதி

ADDED : ஏப் 10, 2024 06:29 AM
கிராம ஊராட்சிகளில் வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர்வரி, சொத்துவரி மற்றும் பிளான் அப்ரூவல் பெறுவதற்கு செலுத்த வேண்டிய தொகையை ஊராட்சிகளில் செலுத்தி பிரிண்ட் செய்யப்பட்ட ரசீது பெற்று வந்தனர். வசூலித்த பணம் ஊராட்சிக்கான வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களாக ஊராட்சிகளில் வரி வசூலை ஆன்லைன் மூலம் செலுத்த நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது வரி வசூல் ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்டு அதற்கான ரசீது வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்கள் வரி வசூலுக்கான காலங்களாகும். இதனால் பலரும் அந்தந்த ஊராட்சிகளில் தங்களுக்கான வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி, தொழில் வரி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தி வசூலிப்பார்கள். மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஊராட்சிகளில் அடிக்கடி ஏற்படும் சர்வர் பிரச்னையால் வரி வசூலிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி செயலர்கள் பொதுமக்களிடம் வரி செலுத்துவதற்கான பணத்தைப் பெற்றும் ரசீது வழங்க முடியவில்லை. ரசீது வழங்காமல் ஊராட்சி நிர்வாகத்தினர் பணத்தை இருப்பில் வைத்தால் அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்கின்றனர். கால தாமதமாகும் போது வரி செலுத்த வருபவர்கள் பணத்தை அரசின் கணக்கில் செலுத்தாமல் திரும்பிச் செல்கின்றனர். இதனால் குறிப்பிட்ட காலத்தில் வரி வசூலை முடிக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் திணறுகின்றனர். ஊராட்சிக்கான இன்டர்நெட் இணைப்பில் அடிக்கடி ஏற்படும் சர்வர் பிரச்னையை சரி செய்திட அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.