/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தூர்வாரப்படாத மந்தை ஓடையால் சுகாதாரக்கேடு
/
தூர்வாரப்படாத மந்தை ஓடையால் சுகாதாரக்கேடு
ADDED : அக் 09, 2025 05:19 AM
போடி : போடி அருகே ராசிங்காபுரம் மந்தை ஓடை தூர் வாரப்படாததால் குப்பை தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
போடி ஒன்றியம், ராசிங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது குளத்துப்பட்டி. ராசிங்காபுரம் மெயின் ரோட்டில் இருந்து குளத்துப்பட்டி செல்லும் ரோட்டில் மந்தை ஓடைப் பகுதி உள்ளது. பல ஆண்டுகளாக தூர்வாரப் படாததால் முட்புதர் சூழ்ந்து உள்ளன. இங்கு குப்பைகளை கொட்டுவதால் மழைநீர் சீராக செல்ல வழியின்றி கழிவுநீர் ஓடையில் தேங்குகிறது.
இதன் அருகே குடியிருப்புகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது. ஓடையில் தேங்கிய கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மக்களின் சிரமங்களை தவிர்க்க ஓடைப் பகுதியை சூழ்ந்துள்ள முட்புதர்களை அகற்றி, மழைநீர் சீராக செல்லும் வகையில் தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.