/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நலிந்த 18 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும் மத்திய இணை அமைச்சர் உறுதி
/
நலிந்த 18 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும் மத்திய இணை அமைச்சர் உறுதி
நலிந்த 18 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும் மத்திய இணை அமைச்சர் உறுதி
நலிந்த 18 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும் மத்திய இணை அமைச்சர் உறுதி
ADDED : அக் 26, 2025 05:10 AM

மூணாறு: வட்டவடை ஊராட்சியில் நலிவடைந்த 18 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும் என மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி தெரிவித்தார்.
மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் கோவிலூரில் பா.ஜ., சார்பில் திண்ணை நட்பு கூட்டம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்தது.
அதில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி பங்கேற்றார். மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள ஊராட்சியில் ரோடு, கல்வி, மருத்துவம் உள்பட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதியுற்று வருவதையும், மனித, வனவிலங்கு மோதல், விவசாயம் பாதிப்பு ஆகியவற்றை குறித்தும் மக்கள் அமைச்சரிடம் விளக்கினர்.
அமைச்சர் கூறியதாவது: வட்டவடை ஊராட்சியில் நலிவடைந்த 18 குடும்பங்களுக்கு எனது மகளின் பெயரில் செயல்படும் அறக்கட்டளை மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். மத்திய அரசின் பி.எம்.ஏ.ஒய். திட்டத்திற்கு பதிலாக ' லைப் மிஷன்' எனும் திட்டத்தில் வீடு வழங்கப்படும் என கூறியதை மாநில அரசு பின்பற்றவில்லை. மக்களை ஏமாற்றியவர்களை ரோட்டில் நிறுத்தி வைத்து கேள்வி கேட்க வேண்டும்.
கேரளாவில் கல்வி அமைச்சராக படித்தவர் வர வேண்டும். அதனை தற்போதுள்ள அரசிடம் எதிர்பார்க்க இயலாது. இடது சாரி கூட்டணி அரசு மாறியதும் ஆலோசிக்கப்படும், என்றார்.
சந்திப்பு: வட்டவடை ஊராட்சியில் கொட்டாக் கொம்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அபிமன்யூ, அவர் படித்த எர்ணாகுளத்தில் உள்ள கல்லூரியில் 2018 ஜூலை 2ல் கொலை செய்யப்பட்டார். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் மாணவர் அமைப்பை சேர்ந்தவர். அவரது வீட்டிற்கு சென்ற அமைச்சர் அபிமன்யூவின் பெற்றோரை சந்தித்து பேசினார்.

