/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு இன்றி அன்றாடம் தவிப்பு; 25 ஆண்டுகளாக வலியுறுத்தியும் கிடைக்காத பைபாஸ் ரோடு திட்டம்
/
ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு இன்றி அன்றாடம் தவிப்பு; 25 ஆண்டுகளாக வலியுறுத்தியும் கிடைக்காத பைபாஸ் ரோடு திட்டம்
ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு இன்றி அன்றாடம் தவிப்பு; 25 ஆண்டுகளாக வலியுறுத்தியும் கிடைக்காத பைபாஸ் ரோடு திட்டம்
ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு இன்றி அன்றாடம் தவிப்பு; 25 ஆண்டுகளாக வலியுறுத்தியும் கிடைக்காத பைபாஸ் ரோடு திட்டம்
ADDED : அக் 26, 2025 05:05 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடியால் வெளியூர் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அன்றாடம் பரிதவிக்கின்றனர். பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தியும் நெருக்கடிக்கு தீர்வு தரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.
கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி அமைந்துள்ளது. ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி செக்போஸ்ட் வரை 2 கி.மீ., தூரத்தில் சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி ஆகிய ஊர்கள், விரிவாக்க பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.
தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கிராமங்கள், வெளியூர்களில் இருந்து ஆண்டிபட்டிக்கு வந்து செல்கின்றனர். 100க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய தெப்பம்பட்டி ரோடு, வைகை அணை ரோடு, ஏத்த கோவில் ரோடு, திண்டுக்கல் மாவட்டத்தை இணைக்கும் புள்ளிமான்கோம்பை ரோடு ஆகியவை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகிறது.
இதனால் நகர் பகுதிக்கு வந்து செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆண்டிபட்டியில் போக்குவரத்து போலீஸ் பிரிவும் இல்லை. குறைவான எண்ணிக்கையில் உள்ள போலீசார் மிகுந்த சிரமத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர்.
ஆண்டிபட்டியில் நிலவும் போக்குவரத்து பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
நெருக்கடியால் அடிக்கடி விபத்து ராஜா, சக்கம்பட்டி: 24 மணி நேரமும் நூற்றுக்கணக்கான வெளியூர் வாகனங்கள் ஆண்டிபட்டியை கடந்து செல்கிறது.
பல திருமண மண்டபங்கள், கோயில்கள் நெடுஞ்சாலையை ஒட்டியே அமைந்துள்ளன. விசேஷ நாட்கள் முகூர்த்த நாட்களில் வாகனங்களில் நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றனர்.
இதனால் ஆண்டிபட்டி நகரை கடந்து செல்லும் வாகனங்கள் தினமும் நீண்ட வரிசையில் ஊர்ந்து செல்கின்றன.
நகர் பகுதிக்கு வந்து செல்லும் முதியோர்கள், குழந்தைகள் ரோட்டை கடக்க முடியாமல் பரிதவிக்கின்றனர். நெருக்கடியால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது.
பள்ளி, கல்லூரி வாகனங்களை கட்டுப்பாடு இன்றி இஷ்டத்திற்கு ரோட்டோரங்களில் நிறுத்தி மாணவர்களை ஏற்றி, இறக்கி செல்கின்றனர்.
ரோட்டில் ஓரங்களை பல இடங்களில் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் முழுமை பெறவில்லை.
ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்ற வேண்டும் சங்கர், சத்யா நகர், ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் நடைபாதை கடைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நடைபாதை கடைகளுக்கு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்க வேண்டும். நகர் பகுதியில் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி இருபுறமும் நடைபாதை அமைக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை 'ரெக்கவரி வாகனம்' வைத்து அப்புறப்படுத்த வேண்டும்.
பேரூராட்சி நிர்வாகம் போலீசார் அன்றாடம் ஆக்கிரமிப்புகளை கண்காணித்து எச்சரிக்க வேண்டும். என்றாவது ஒருநாள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கையால் பயன் இல்லை.
சரக்குகள் ஏற்றி இறக்கிச் செல்லும் வாகனங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே நகர் பகுதியில் அனுமதிக்க வேண்டும்.

