/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை கேட்டு ஒன்றிய அலுவலகம் முற்றுகை
/
தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை கேட்டு ஒன்றிய அலுவலகம் முற்றுகை
தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை கேட்டு ஒன்றிய அலுவலகம் முற்றுகை
தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை கேட்டு ஒன்றிய அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூலை 29, 2025 01:04 AM

ஆண்டிபட்டி: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை ஒதுக்காததை கண்டித்து திருமலாபுரம் ஊராட்சி  பெண்கள் ஆண்டிபட்டி ஊராட்சி  அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்த ஊராட்சியில் பந்துவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, பாலசமுத்திரம், அன்னை இந்திரா நகர், கருப்பத்தேவன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, திருமலாபுரம் ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. இரு ஆண்டாக இக்கிராமத்திற்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பயனாளிகளுக்கு வேலை வழங்கவில்லை. பதிவு செய்த பயனாளிகள் தொடர்ந்து வேலை கேட்டு வலியுறுத்தினர்.
நடவடிக்கை இல்லாததால் நேற்று இந்த ஊராட்சியில் பல கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்டிபட்டி  ஒன்றிய அலுவலகத்தில் அமர்ந்து முற்றுகையிட்டனர்.
இட நெருக்கடி ஏற்பட்டதால் அரை மணி நேரத்திற்கு பின் அலுவலகம் முன்பு அமர்ந்து 2 மணிநேரம் காத்திருந்தனர்.
பி.டி.ஓ., சரவணன்,  ஒன்றிய அலுவலர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த ஊராட்சியில் பணிகள் மேற்கொள்வதற்கு ரூபாய் பல லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது என்றும் நிர்வாக அனுமதி கிடைத்தபின் பணிகளை விரைவில் மேற்கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

