ADDED : ஏப் 05, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
சின்னமனூர்:சின்னமனூர் சொக்கநாதபுரத்தில் பிற கட்சியினர் பா.ஜ., இணையும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.,மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் வினோத், பொருளாளர் பொன் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். நகரதலைவர் சிங்கம் வரவேற்றார்.
புதிதாக இணைந்த நிர்வாகிகளுக்கு கட்சி அடையாள அட்டைகளை மாவட்ட தலைவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சசிக்குமார், பிரபு சமத்துவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
