ADDED : ஜூலை 04, 2026 11:52 PM

அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் காமாட்சியம்மன் கோயில் மெயின் தெருவில் இருந்து சவுடம்மன் கோயில் தெருவிற்கு செல்லும் இணைப்பு பாலம் சேதமடைந்து பல மாதங்கள் ஆகிறது.
வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள இத்தெருவில் சீரமைக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுவரை சீரமைக்கவில்லை. இரவில் டூவீலரில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும்.
