/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சீரமைக்காத லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்ட ரோடு
/
சீரமைக்காத லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்ட ரோடு
ADDED : ஆக 13, 2025 02:22 AM

கூடலுார்:அரசு வாகனங்கள் அதிகம் செல்லும் லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்ட ரோடு பல மாதங்களாக சீரமைக்காமல் உள்ளது.
லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இங்கு பம்பிங் ஸ்டேஷன், நீர்த்தேக்க தொட்டிகள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம், அலுவலர்கள் குடியிருப்பு, குளோரினேசன் அறை உள்ளன. தினந்தோறும் அரசு வாகனங்கள் இவ்வழியாக அதிகம் செல்லும். மேலும் மாணவர் விடுதியும் இப்பகுதியில் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோடு பல மாதங்களாக சீரமைக்காமல் உள்ளது.
பொதுமக்களின் தொடர் கோரிக்கையை முன்னிட்டு சமீபத்தில் ரோடு போடுவதற்காக ஏற்கனவே சேதமடைந்த ரோட்டை சமதளப்படுத்தினர். மேலும் தார் ஊற்றி தயார் நிலையில் வைத்தனர். ஆனால் பல நாட்களாகியும் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்காததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்

