/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயன்பாடு இன்றி குடிநீர் சுத்திகரிப்பு மையம்
/
பயன்பாடு இன்றி குடிநீர் சுத்திகரிப்பு மையம்
ADDED : அக் 04, 2025 04:18 AM

போடி: போடி அருகே ராசிங்கபுரத்தில் ரூ.7.88 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்து ஐந்து ஆண்டுகளாக ஆகியும் பயன்பாடு இன்றி உள்ளது.
போடி ஒன்றியம், ராசிங்காபுரம் ஊராட்சியில் 1100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். உப்புக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு குடம் ரூ.ஒன்றுக்கு சப்ளை செய்யும் வகையில் முத்தாலம்மன் கோயில் அருகே மத்திய நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 7.88 லட்சம் மதிப்பில் சோலார் மின் உற்பத்தி மூலம் குடிநீர் சுத்திகரிப்பு மையம் ஐந்து ஆண்டு களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இந்த சுத்திரிகரிப்பு மையம் சில நாட்கள் மட்டும் செயல்பட்டது. முறையாக பராமரிப்பு இல்லாததால் தற்போது பயன்பாடு இன்றி காட்சி பொருளாகவும், குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை பயன் பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.