/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு அலுவலகங்களில் காகிதம் இல்லாத டிஜிட்டல் பயன்பாடு அமல்படுத்த அறிவுரை ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மாறுங்கள்

ADDED : அக் 04, 2025 04:17 AM
தேனி: அரசு அலுவலகங்களில் காகிதம் இல்லா டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாடு அக்.1 முதல் அமலானது. அதன்படி கருவூலத்துறை மூலம் வழங்கப்படும் சம்பளம், முன்பணம், செலவு விபரங்கள் அனைத்து ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளஅறிவுறுத்தப்பட்டது.
அரசு ஊழியர்களின் ஊதியம், இதர தகவல்களை டிஜிட்டல் முறையில் நிர்வகிப்பதன் மூலம் வெளிப்படைத் தன்மை, செயல்திறன் அதிகரித்து வருகிறது.
இப்பணிகள் ஒருங்கிணைந்த மனித வளம் மற்றும் நிதி மேலாண்மை திட்டம் மூலம் ஒருங்கிணைத்து காகித பயன்பாடு அற்ற அரசு அலுவலகங்கள் உருவாக்கும் திட்டம்நடைமுறைப்படுத்தப்பட்டன.இதன் ஒரு பகுதியாக அரசு ஊழியர்களின் ஊதியம், பண்டிகை, திருமண முன்பணம், அரசு ஊழியர் வாரிசுகளின் கல்வி கட்டண முன்பணம் உள்ளிட்டவைகள் களஞ்சியம் செயலிமூலம் விண்ணப்பித்து பெரும் வசதியும் உள்ளது.
மாவட்ட கருவூலத்துறை மூலம் அரசு துறைகளில் பணியாற்றும் 384 சம்பளம் வழங்கும் அலுவலர்களுக்கு செப். 24 முதல் 30 வரை 5 நாட்கள் 5 தாலுகாக்களில் சிறப்பு பயிற்சி மாவட்டகருவூலத்துறை வழங்கியுள்ளனர். இந்நிலையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள அரசுத்துறை செலவினங்களுக்கான பில் விபரங்களை மாநில கணக்கு தணிக்கை அலுவலரின் பார்வைக்கு அனுப்புவது கட்டாயம் என கருவூல கணக்குத்துறை உத்தரவிட்டுள்ளது.கருவூலத்துறை அலுவலர்கள் கூறுகையில், ரூ.20 ஆயிரத்திற்கு கீழ் உள்ள செலவு விபரங்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.
ரூ.20 ஆயிரத்திற்கு மேல் உள்ள அனைத்து செலவு விபரங்களையும் மாநில கணக்கு தணிக்கை அலுவலரின் கவனத்திற்கு அனுப்புவதுகட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளை தவிர்க்கும் நடவடிக்கையாக கருதப்படுகிறது என்றனர்.