/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பராமரிப்பின்றி முட்புதர்கள் சூழ்ந்த பென்னிகுவிக் மணிமண்டபம்
/
பராமரிப்பின்றி முட்புதர்கள் சூழ்ந்த பென்னிகுவிக் மணிமண்டபம்
பராமரிப்பின்றி முட்புதர்கள் சூழ்ந்த பென்னிகுவிக் மணிமண்டபம்
பராமரிப்பின்றி முட்புதர்கள் சூழ்ந்த பென்னிகுவிக் மணிமண்டபம்
ADDED : அக் 04, 2025 04:17 AM

கூடலுார்: பராமரிப்பின்றி லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் முட்புதர்கள் சூழ்ந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் புலம்புகின்றனர்.
தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ள பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக்கிற்கு லோயர்கேம்பில் மணி மண்டபம் கட்டி 2013ல் பயன்பாட்டிற்கு வந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மணிமண்டபம் தொடர்ந்து பராமரிக்கப்படுவதில்லை. குடிநீர், இருக்கை வசதி செய்து தரப்படவில்லை.
நன்கொடையாளர் கட்டி கொடுத்த குடிநீர் தொட்டியையும் பராமரிக்காமல் காட்சி பொருளாக உள்ளது. கழிப்பறை கட்டடம் மட்டுமே உள்ளது.
ஆனால் அதை பயன்படுத்த முடியாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தற்போது தேர்வு விடுமுறையானதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
மணி மண்டப வளாகம் பராமரிக்காமல் முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் புலம்பிச் செல்கின்றனர்.