/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டிக்கெட் வழங்காமல் பண மோசடி டபுள் டெக்கர் பஸ் ஊழியர் 'சஸ்பெண்ட்'
/
டிக்கெட் வழங்காமல் பண மோசடி டபுள் டெக்கர் பஸ் ஊழியர் 'சஸ்பெண்ட்'
டிக்கெட் வழங்காமல் பண மோசடி டபுள் டெக்கர் பஸ் ஊழியர் 'சஸ்பெண்ட்'
டிக்கெட் வழங்காமல் பண மோசடி டபுள் டெக்கர் பஸ் ஊழியர் 'சஸ்பெண்ட்'
ADDED : அக் 04, 2025 04:16 AM
மூணாறு: ' டபுள் டெக்கர்' பஸ்சில் டிக்கெட் வழங்காமல் பண மோசடி செய்த ஊழியர் பணியில் இருந்து ' சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
மூணாறின் இயற்கை அழகை பஸ்சில் பயணித்தவாறு ரசிக்கும் வகையில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முற்றிலும் கண்ணாடி இழை கொண்டு உருவாக்கப்பட்ட ' டபுள் டெக்கர்' பஸ் சேவை பிப்.8ல் பயன்பாட்டுக்கு வந்தது. பழைய மூணாறில் உள்ள டெப்போவில் இருந்து இயக்கப்படும் பஸ், கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆனயிரங்கல் அணையின் 'வியூ பாய்ண்ட்' வரை சென்று திரும்பும். பஸ்சில் டிரைவர், நடத்துனர் என ஒரு ஊழியர் மட்டும் பணியமர்த்தப்பட்டு வருகிறது.
அதன்படி ராஜக்காடு அருகே என்.ஆர். சிட்டியை சேர்ந்த பிரின்ஸ்சாக்கோ செப்.27ல் பஸ்சில் ஊழியராக சென்றார். அன்று மாலை போக்குவரத்து கழக விஜிலன்ஸ் அதிகாரிகள் பஸ்சில் ஆய்வு செய்த போது டிக்கெட் வழங்காமல் பண மோசடி நடந்ததும், டிக்கெட் பையில் ரூ.821 அதிகமாக இருந்ததும் தெரியவந்தது. அது தொடர்பாக பிரின்ஸ்சாக்கோ பணியில் இருந்து ' சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.