/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயன்பாடு இல்லாத குடிநீர் உறைகிணறு: தவிப்பில் ஜெயம் நகர் மக்கள்
/
பயன்பாடு இல்லாத குடிநீர் உறைகிணறு: தவிப்பில் ஜெயம் நகர் மக்கள்
பயன்பாடு இல்லாத குடிநீர் உறைகிணறு: தவிப்பில் ஜெயம் நகர் மக்கள்
பயன்பாடு இல்லாத குடிநீர் உறைகிணறு: தவிப்பில் ஜெயம் நகர் மக்கள்
ADDED : டிச 01, 2025 06:20 AM

போடி: போடி அருகே ஜெயம் நகருக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான பகிர்மான குழாய் அமைக்காமல் இருப்பதால், அணைப்பிள்ளையார் ஆற்றில் ரூ.பல லட்சும் மதிப்பில் அமைக்கப்பட்ட உறை கிணறு பயன்பாடு இன்றி உள்ளது.
போடி ஒன்றியம் அணைக்கரைப்பட்டி ஊராட்சி ஜெயம் நகர். இங்கு 800 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு குடிநீர் மேல் நிலைத் தொட்டி இருந்தும் குடிநீர் வசதி இல்லை. இதனால் நகராட்சி 10 வது வார்டில் உள்ள வீடுகளுக்கு சென்று மாதம் ரூ.50 க்கு மேல் கொடுத்து குடிநீர் பிடித்து, அதனை பயன்படுத்தும் நிலையில் இப்பகுதி மக்கள் உள்ளனர். மேலும் போர்வெல் ஆதாரங்களில் கிடைக்கும் உவர்ப்பு நீரையே குடிநீராக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்களது சிரமங்களை தவிர்க்க 2 கி.மீ., துாரம் உள்ள அணைப்பிள்ளையார் ஆற்றில் உறை கிணறு, பைப் லைன் அமைத்து ஜெயம் நகரில் உள்ள மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக அணைப்பிள்ளையார் ஆற்றில் போடி ஒன்றிய பொது நிதி ரூ.14 லட்சம் செலவில் உறை கிணறு அமைக்கப்பட்டது. பைப் லைன் அமைக்க நிதி ஒதுக்கீடு இல்லை. பல மாதங்களாகியும் பைப் லைன் அமைக்காததால் உறை கிணறு பயன்பாடு இன்றி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

