/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீசார் பற்றாக்குறையால் தேவதானப்பட்டியில் அசாதாரண சூழல்
/
போலீசார் பற்றாக்குறையால் தேவதானப்பட்டியில் அசாதாரண சூழல்
போலீசார் பற்றாக்குறையால் தேவதானப்பட்டியில் அசாதாரண சூழல்
போலீசார் பற்றாக்குறையால் தேவதானப்பட்டியில் அசாதாரண சூழல்
ADDED : ஜூலை 25, 2025 03:00 AM
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட போலீஸ் நிர்வாகம், காலியாக கிடக்கும் இன்ஸ்பெக்டர், போலீசார் பணியிடம் விரைவில் நிரப்ப வேண்டும்.
தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்டு அட்டணம்பட்டி, சில்வார்பட்டி,டி.வாடிப்பட்டி, கெங்குவார்பட்டி, புஷ்பராணி நகர், கொடைக்கானல் ரோடு காமக்காபட்டி, ஏ.மீனாட்சிபுரம், ஸ்ரீராமபுரம், பரசுராமபுரம், டம்டம்பாறை வரை 25 கி.மீ., தூரம் பரந்து விரிந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் ஜாதி மோதல், கோயில் திருவிழாவில் மோதல், கொலை, கொள்ளை, திருட்டு, மணல் கடத்தல், ஸ்டேஷனில் புகுந்து போலீசாருக்கு மிரட்டல் போன்ற நிகழ்வுகள் போலீசாருக்கு சவால் விடும் வகையில் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இங்கு 50 போலீசார் பணியாற்ற வேண்டும். ஆனால் 30 போலீசார் மட்டுமே உள்ளனர். போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் ரமேஷை போலீசார் தாக்கிய விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா, எஸ்.எஸ்.ஐ., சுயசம்பு மற்றும் மூன்று போலீசார் வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., பணியினை ஜெயமங்கலம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கூடுதல் பொறுப்பாக கவனிக்கும் நிலை உள்ளது.
எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் இன்ஸ்பெக்டர், போலீசார் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.--