UPDATED : அக் 09, 2026 04:56 AM
ADDED : அக் 08, 2026 05:47 PM

மூணாறு: மூணாறில் தண்ணீர் ஏ.டி.எம்., 7 மாதங்களாக பயன்பாடு இன்றி உள்ளது.
மூணாறு ஊராட்சி காங்கிரஸ் கூட்டணி கைவசம் உள்ளது. ஊராட்சியில் 19ம் வார்டான நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தலா ரூ.8 லட்சம் வீதம் ரூ. 16 லட்சம் செலவில் இரண்டு தண்ணீர் ஏ. டி.எம்.கள் டாக்சி ஸ்டாண்ட், தபால் அலுவலகம் ஜங்ஷன் பகுதிகளில் தண்ணீர் ஏ. டி. எம். இயந்திரங்கள் வைக்கப்பட்டுமார்ச் 13ல் துவக்க விழா நடந்தது. ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.5க்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் துவக்க விழா நடந்து ஏழு மாதங்கள் ஆகியும் தண்ணீர் ஏ.டி.எம். பயன்பாட்டுக்கு வராததால் இயந்திரங்கள் துருபிடித்து சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
நகரில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கும், 500 மி.லி., க்கு கீழ் உள்ள அனைத்து பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் தடை ஆக. 1 முதல் தடை விதிக்கப்பட்டது. ஆரம்பத்தில் விதிமுறைகளை மீறியதாக ஒரு சில கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தொடர் நடவடிக்கை இல்லாததால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நகரில் செயல்படுத்தப்பட்ட இரண்டு திட்டங்களும் செயலற்று போனதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
