/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி லோக்சபா தொகுதியை காங்.,க்கு ஒதுக்க வலியுறுத்தல்
/
தேனி லோக்சபா தொகுதியை காங்.,க்கு ஒதுக்க வலியுறுத்தல்
தேனி லோக்சபா தொகுதியை காங்.,க்கு ஒதுக்க வலியுறுத்தல்
தேனி லோக்சபா தொகுதியை காங்.,க்கு ஒதுக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 04, 2024 03:45 AM

தேனி : தேனியில் காங்., லோக்சபா தொகுதி ஆலோசனை கூட்டத்தில் தேனி தொகுதியை மீண்டும் காங்.,க்கு ஒதுக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
அல்லிநகரத்தில் நடந்த காங்., ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது.
தேனி லோக்சபா தொகுதி பொறுப்பாளர் ஜெயசிம்ம நாச்சியப்பன் முன்னிலை வகித்தார். தேனி தொகுதியை மீண்டும் காங்., க்கு ஒதுக்க வேண்டும்.
மீண்டும் முன்னாள் எம்.பி., ஆருண் போட்டியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர். பத்து பூத் கமிட்டிக்கு ஒரு தலைவர், பொறுப்பாளர் நியமித்து பூத்கமிட்டி செயல்பாடுகளைகண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் பிப்., 13ல் சென்னையில் காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேபங்கேற்கும் கூட்டத்தில் அதிக நிர்வாகிகள் பங்கேற்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் துணைத்தலைவர் சன்னாசி, மாவட்ட செயலாளர்கள் அபுதாஹிர், சம்சுதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்ட ஏற்பாடுகளை நகர தலைவர் கோபிநாத்செய்திருந்தார்.