/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்லுாரிகளில் வாக்காளர் சேர்க்கை முகாம்கள் நடத்த வலியுறுத்தல்
/
கல்லுாரிகளில் வாக்காளர் சேர்க்கை முகாம்கள் நடத்த வலியுறுத்தல்
கல்லுாரிகளில் வாக்காளர் சேர்க்கை முகாம்கள் நடத்த வலியுறுத்தல்
கல்லுாரிகளில் வாக்காளர் சேர்க்கை முகாம்கள் நடத்த வலியுறுத்தல்
ADDED : நவ 21, 2024 05:08 AM
தேனி: மாவட்டத்தில் உள்ள கல்லுாரிகளில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை முகாம்கள் நடத்த மாணவர்கள் கோரியுள்ளனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடக்கிறது. அதே நேரத்தில் பெயர் சேர்த்தலுக்கு நேரடியாக மட்டுமின்றி, ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். பெரும்பாலான புதிய வாக்காளர்களுக்கு ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என தெரியாமல் நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்குகின்றனர். இதனால் பிற மாவட்டத்தில் தங்கி பணிபுரிபவர்கள், கல்லுாரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்காமல் விட்டு விடுகின்றனர்.
கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் தான் பெரும்பாலும் இளம் வாக்காளர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆன்லைனில் எவ்வாறு பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிப்பது பற்றி பயிற்சி வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்களும் விண்ணப்பித்துக்கொள்ளவர்கள், தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் விண்ணப்பிக்க கற்றுக்கொடுப்பார்கள். இதன் மூலம் கல்லுாரிகளில் படிக்கும் 18 வயது, அதற்கு மேல் வயதுடைய மாணவர்கள் அனைவரது பெயரும் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்ய முடியும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

