/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளம் நகராட்சியில் 'அம்ரூத்' திட்டம் துவங்க வலியுறுத்தல்
/
பெரியகுளம் நகராட்சியில் 'அம்ரூத்' திட்டம் துவங்க வலியுறுத்தல்
பெரியகுளம் நகராட்சியில் 'அம்ரூத்' திட்டம் துவங்க வலியுறுத்தல்
பெரியகுளம் நகராட்சியில் 'அம்ரூத்' திட்டம் துவங்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 16, 2025 12:21 AM
பெரியகுளம்: ''பெரியகுளம் நகராட்சி பகுதிக்கு பேரிஜம் ஏரியில் இருந்து பாதுகாப்பான குடிநீர் கிடைக்க 'அம்ரூத்' திட்டம் துவக்க வேண்டும்.'' என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். 1912ல் முதல் கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணைக்கு தண்ணீர் வருகிறது.
அங்கிருந்து ராஜவாய்க்கால் வழியாக குடிநீர் தொட்டிக்கு வந்து சுத்திகரிப்பு செய்து பெரியகுளம் நகராட்சி பகுதியில் தினமும் 48 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் ஆகிறது. பேரிஜம் ஏரியில் இருந்து சோத்துப்பாறை அணைக்கு 20 கி.மீ., துாரம் திறந்த வெளியாக வரும் நீர் 16 கி.மீ., வரை அடர்ந்த வனப்பகுதி வழியாக வரும் போது துாய்மையாக வருகிறது. அடுத்துள்ள 4 கி.மீ., துாரம் அகமலை ஊராட்சி சொக்கன்அலை, அலங்காரம் உட்கடை மலை கிராம மக்கள் திறந்த வெளியில் வரும் நீரில் ஆடு, மாடுகளை குளிக்க வைப்பது, துணி துவைப்பது என பல்வேறு வகைகளில் நீரினை மாசுபடுத்துகின்றனர்.
இதே போல் சோத்துப்பாறை அணை கீழ் பகுதிக்கு வரும் நீரை அருகில் குடியிருப்போர் சுற்றுலா பயணிகள் நீரினை மாசுபடுத்துகின்றனர். சில நேரங்களில் குடிநீரில் துர்நாற்றம் வீசுகிறது.
அம்ரூத் குடிநீர் திட்டப்பணி
பாதுகாப்பான குடிநீர் வழங்க சோத்துப்பாறை அணை மேற்புறம் 4 கி.மீ., முன்பு தடுப்பணை கட்டி, உயரமான மேல்நிலைத் தொட்டி வழியாக மின்மோட்டார் பயன்பாடின்றி குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்ய அம்ரூத் திட்டப்பணிகள் ரூ.25 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்து பரிசீலனையில் உள்ளது.
துணை முதல்வர் உதயநிதி, இத் திட்ட பணி துவக்க உத்தரவிட வேண்டும் என பெரியகுளம் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.-