/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கால்நடை பராமரிப்புத்துறையில் எக்ஸ்ரே ஸ்கேன் டெக்னீசியன் நியமிக்க வலியுறுத்தல்
/
கால்நடை பராமரிப்புத்துறையில் எக்ஸ்ரே ஸ்கேன் டெக்னீசியன் நியமிக்க வலியுறுத்தல்
கால்நடை பராமரிப்புத்துறையில் எக்ஸ்ரே ஸ்கேன் டெக்னீசியன் நியமிக்க வலியுறுத்தல்
கால்நடை பராமரிப்புத்துறையில் எக்ஸ்ரே ஸ்கேன் டெக்னீசியன் நியமிக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 24, 2025 03:47 AM
உத்தமபாளையம்: கால்நடை பராமரிப்புத் துறையில் ஸ்கேன், எக்ஸ்ரே டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க டாக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கால்நடை மருத்துவமனைகள் இரண்டு முதல் 4 வரை செயல்படுகின்றன. மருத்துவமனை இல்லாத ஊர்களில் மருந்தகங்களாகவும், கிராமங்களில் கிளை நிலையங்களாகவும் உள்ளன. மருத்துவமனைகளில் மட்டுமே எக்ஸ்ரே, ஸ்கேன், ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
தேனி மாவட்டத்தில் போடி, அல்லிநகரம், பெரிய குளம் ஆகிய ஊர்களில் மட்டும் கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. அரசு மருத்துவமனைகளை தவிர்த்து ஆண்டிபட்டி மற்றும் கம்பத்தில் உள்ள மருந்தகங்களுக்கு ஸ்கேன் வழங்கப்பட்டுள்ளது .
விரைவில் அனைத்து மருந்தகங்களுக்கும் ஸ்கேன் வழங்கப்பட உள்ளது. ஆனால் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் கருவிகளை கையாள்வதற்கு ரேடியோகிராபர் பணியிடங்கள் எந்த ஊரிலும் கிடையாது. தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்பு துறையில் 29 ரேடியோகிராபர் பணியிடங்கள் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த 29 பணியிடங்களுமே காலியாக உள்ளது.
இதனால் மருத்துவமனைகளில் கால்நடைகளுக்கு அவற்றின் நோயை கண்டறிவதில் சிக்கல் உள்ளது. ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே டெக்னீசியன்கள் நியமனம் செய்யாததால் டாக்டர்களே அந்த பணியையும் சேர்த்து பார்க்க வேண்டி உள்ளது. இதனால் டாக்டர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. மேலும் டெக்னீசியன்கள் பார்த்தால் தான் 100 சதவீதம் சரியாக இருக்கும்.
எனவே காலியாக உள்ள ரேடியோகிராபர் பணியிடங்களை உடனே நிரப்ப கால்நடை பராமரிப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

