/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தோட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வலியுறுத்தல்
/
தோட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வலியுறுத்தல்
தோட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வலியுறுத்தல்
தோட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வலியுறுத்தல்
ADDED : ஜூலை 14, 2025 02:45 AM
கம்பம்: ''இடுக்கி, தேனி மாவட்டங்களின் சுகாதாரத் துறையினர் இணைந்து ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், காச நோய் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.'' என, கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவில் ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்களை பரிசோதிப்பது சுகாதாரத்துறையினருக்கு சவாலாக இருந்தது.
ஏனெனில் உத்தமபாளையம், போடி தாலுகாக்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அதிகாலை 6:00 மணிக்கே பணிக்கு சென்று விடுவர். காலை 10:00 மணியளவில் வீடுகளுக்கு செல்லும் கிராம செவிலியர்கள். சுகாதாரத்துறையின் ஏமாற்றத்துடன் திரும்பி வருவர். மறுபடியும் மாலை 4:00 மணிக்கு மேல் தான் தொழிலாளர்கள் வீட்டிற்கு வருவர். அந்த நேரத்தில் சுகாதார பணியாளர்கள் வீட்டிற்கு சென்று விடுவர். எனவே அவர்களை ஆய்வுக்கு உட்படுத்துவது இயலாத காரியமாக இருந்தது. இதற்கான தீர்வாக கடந்தாண்டு இடுக்கி, தேனி மாவட்டங்களின் கலெக்டர்களின் ஆலோசனையின் படி, கம்பமெட்டு சமுதாய கூடத்தில் 3 நாட்களாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
அந்த முகாமில் இடுக்கி, தேனி மாவட்டங்களை சேர்ந்த சுகாதாரத் துறையினர் இணைந்து பரிசோதனை செய்தனர். நாள்தோறும் மாலை 3:00 மணியளவில் இந்த முகாம் துவங்கியது. ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று விட்டு, வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் தொழிலாளர்களை நிறுத்தி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சர்க்கரை, ரத்த அழுத்தம், காசநோய், எச்.ஐ.வி., பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முகாமில் 800 தொழிலாளர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
இந்தாண்டும் அதே போன்ற முகாமை நடத்த தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.