/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லோயர்கேம்ப் நீர்வரத்து ஓடை சீரமைக்க வலியுறுத்தல்
/
லோயர்கேம்ப் நீர்வரத்து ஓடை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 10, 2025 05:35 AM

கூடலுார்: லோயர்கேம்ப் நீர்வரத்து ஓடையை சீரமைக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடலுார் நகராட்சியில் 21வது வார்டாக உள்ளது லோயர்கேம்ப். தமிழக கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியில் எப்போதும் குளுமையாக இருக்கும். கனமழை பெய்யும் நாட்களில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் தமிழக அரசு போக்குவரத்துக் கழக டெப்போவை ஒட்டியுள்ள ஓடை வழியாக செல்லும். இதற்கு அருகில் குடியிருப்புகள் அதிகம் உள்ளன.  கனமழை பெய்யும் போது வெளியேறும் வெள்ள நீர் ஒட்டியுள்ள குடியிருப்புகளை சேதப்படுத்துகிறது. இதனால் ஓடையை சீரமைத்து மழைநீர் முறையாக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

