ADDED : செப் 29, 2024 08:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார: கடந்த சில நாட்களாக கூடலுார் நகராட்சியில் நாய்கள் தொல்லை அதிகமானது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உலாவரும் நாய் கூட்டங்களால் பெரிதும் அச்சமடைந்தனர்.
மேலும் சமீபத்தில் காந்திகிராமத்தைச் சேர்ந்த சிறுமியை நாய் கடித்ததில் பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கூடலுார் பகுதியில் சுற்றித்திரிந்த 83 தெரு நாய்களை நகராட்சி சார்பில் பிடிக்கப்பட்டு கால்நடை டாக்டர் தலைமையில் வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
நகராட்சி தலைவர் பத்மாவதி, கமிஷனர் வாசுதேவன், சுகாதார ஆய்வாளர் விவேக் உடன் இருந்தனர்.