ADDED : நவ 20, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: இடுக்கி மாவட்டம் வாகமண்ணில் உள்ள கண்ணாடி நடை பாலம் பராமரிப்பு பணிகளுக்காக இன்று (நவ.19) முதல் நவ.30 வரை மூடப்படுகிறது.
இம்மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா பகுதியான வாகமண்ணில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம் தனியாரின் ஒத்துழைப்புடன் ரூ.3 கோடி செலவில் கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டு, 2023 செப். 6ல் பயன்பாட்டுக்கு வந்தது.
கடல் மட்டத்தில் இருந்து 3600 அடி உயரத்தில் 120 அடி நீளத்தில் நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரே நேரத்தில் 15 பேர் செல்லலாம். இந்தியாவில் மிக நீளமான கண்ணாடி நடை பாலம் என கருதப் படுகிறது.
இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக நடை பாலம் இன்று (நவ.19) முதல் நவ.30 வரை மூடப்படுகிறது. இத்தகவலை சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

