/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுற்றுலாப் பயணிகள் விட்டுச்செல்லும் குப்பையால் மாசுபடும் வைகை அணை
/
சுற்றுலாப் பயணிகள் விட்டுச்செல்லும் குப்பையால் மாசுபடும் வைகை அணை
சுற்றுலாப் பயணிகள் விட்டுச்செல்லும் குப்பையால் மாசுபடும் வைகை அணை
சுற்றுலாப் பயணிகள் விட்டுச்செல்லும் குப்பையால் மாசுபடும் வைகை அணை
ADDED : ஜன 18, 2024 06:14 AM

ஆண்டிபட்டி: வைகை அணைக்கு சுற்றுலா வரும் பயணிகள் அணையின் மேல் பகுதியில் விட்டுச் செல்லும் குப்பையால் நீர்த்தேக்கப் பகுதி மாசுபடுகிறது.
வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கேரளா, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் வைகை அணை பார்த்து செல்ல தவறுவதில்லை. தற்போது அணை நிரம்பி நீர் மட்டம் 71 அடியாக முழு அளவில் உள்ளது. 10 சதுர மைல் பரப்பில் விரிந்துள்ள நீர்த்தேக்கத்தை அணையின் மேல் பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் ரசித்துச் செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் தின்பண்டங்களால் சேரும் குப்பையை நீர் தேக்கத்தின் கரையில் வீசுகின்றனர். பல நாட்களாக சேரும் குப்பையின் பெருமளவு நீர்த்தேக்கத்தில் சேர்கிறது. கரைப்பகுதியில் குவிந்துள்ள குப்பை அகற்றப்படுவதும் இல்லை. சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நீர்த்தேக்கத்தின் மேல் பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக பராமரிக்கவும் சேரும் குப்பையை அவ்வப்போது அகற்றவும் நீர் பாசன துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.