/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணை மாந்தோப்பு குத்தகை ரூ.7.66 லட்சத்திற்கு ஏலம்
/
வைகை அணை மாந்தோப்பு குத்தகை ரூ.7.66 லட்சத்திற்கு ஏலம்
வைகை அணை மாந்தோப்பு குத்தகை ரூ.7.66 லட்சத்திற்கு ஏலம்
வைகை அணை மாந்தோப்பு குத்தகை ரூ.7.66 லட்சத்திற்கு ஏலம்
ADDED : டிச 27, 2024 07:29 AM
ஆண்டிபட்டி: 'வைகை அணை மாந்தோப்பு ஓராண்டிற்கான குத்தகை ரூ.7.66 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.' என, நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.
வைகை அணை வலது கரையில் கல்லா, காசா, செந்துாரம், பங்கனப்பள்ளி வகையைச் சேர்ந்த 136 மா மரங்கள் உள்ளன. இந்த மாமரங்களில் காய்கள் பறிப்பு குத்தகைக்கான ஏலம் ஆண்டுதோறும் வைகை அணை நீர்வளத் துறையினர் முன்னிலையில் நடத்தப்படும். வலது கரைப் பூங்கா அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் முருகேசன் அறிவுறுத்தலில் உதவி பொறியாளர் பிரசாந்த் முன்னிலையில் நேற்று குத்தகைக்கான ஏலம் நடந்தது. ரூ.3 லட்சம் வைப்புத் தொகையை வங்கியில் செலுத்தி டி.டி., கொண்டு வந்த 6 பேர் ஏலத்தில் பங்கேற்றனர். அரசு குறைந்தபட்ச கேட்புத் தொகையாக ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் நிர்ணயம் செய்து, பகிரங்க ஏலம் நடந்தது. வைகை அணையை சேர்ந்த சித்ரா அதிகபட்சமாக ரூ.6 லட்சத்து 23 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். அவருக்கு டிசம்பர் 2025 முடிய மரங்களில் காய்கள் பறிப்புக்கு நீர்வளத் துறையினர் அனுமதி கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி, 5 சதவீத காப்புத் தொகையுடன் ரூ.7 லட்சத்து 66 ஆயிரத்து 290 செலுத்தி ஓராண்டுக்கான உரிமை பெற்றார். ஏலத்தொகை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 2 லட்சம் குறைவாக உள்ளது.
கடந்தாண்டு 103 நபர்கள் ஏலத்தில் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு 6 நபர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். கடந்தாண்டு மா மரங்களில் காய்ப்பு பாதித்து விலைவாசி குறைந்ததால் ஏலம் எடுத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏலம் கேட்க பலரும் முன் வரவில்லை என்று ஏலத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.