/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வைகை அணை
/
வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வைகை அணை
ADDED : ஆக 15, 2025 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி,:தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடமாக விளங்கும் வைகை அணை மற்றும் பூங்காவுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தற்போது நீர்மட்டம் 70 அடியை நெருங்கி உள்ளது (மொத்த உயரம் 71 அடி).
முழு அளவை எட்டி வருவதால் அணையின் நீர்த்தேக்க பகுதியை பார்வையிட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இன்று 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வைகை அணை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அணையின் பிரதான மதகுகளில் வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில் தண்ணீர் வருவது சுற்றுலா பயணிகளுக்கு பரவசம் ஏற்படுத்து கிறது. அணையின் முகப்பில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.