ADDED : அக் 12, 2025 11:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி; மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து நீர் வெளியேற்றம் தொடர்வதால் அணை நீர்மட்டம் 62 அடியாக குறைந்துள்ளது.
பெரியாறு அணை நீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் ஆக.14ல் 69.88 அடி வரை உயர்ந்தது. (மொத்த உயரம் 71 அடி). கடந்த சில வாரங்களாக வைகை அணையில் இருந்து 3 மாவட்டங்களின் பாசனத்திற்காக நீர் தொடர்ந்து வெளியேறுகிறது.
நீர் வரத்தை விட, நீர் வெளியேற்றம் அதிகம் இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து நேற்று 62 அடியானது. நீர் வரத்து வினாடிக்கு 1063 கன அடி. அணையில் இருந்து கால்வாய் வழியாக பாசனத்திற்கு வினாடிக்கு 1430 கனஅடியும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி -சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீரும் வெளியேறுகிறது.