/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முருகன் கோயில்களில் வைகாசி விசாகம் கோலாகலம் 'அரோகரா அரோகரா' கோஷமிட்டு வழிபாடு
/
முருகன் கோயில்களில் வைகாசி விசாகம் கோலாகலம் 'அரோகரா அரோகரா' கோஷமிட்டு வழிபாடு
முருகன் கோயில்களில் வைகாசி விசாகம் கோலாகலம் 'அரோகரா அரோகரா' கோஷமிட்டு வழிபாடு
முருகன் கோயில்களில் வைகாசி விசாகம் கோலாகலம் 'அரோகரா அரோகரா' கோஷமிட்டு வழிபாடு
ADDED : ஜூன் 10, 2025 02:03 AM

தேனி: மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாகம் கோலாகலமாக நடந்தது. 'அரோகரா அரோகரா' கோஷமிட்டு முருகனை பக்தர்கள் தரிசித்தனர்.தேனி - பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து 'அரோகரா அரோகரா' கோஷமிட்டு பக்தர்கள் முருகனை தரிசித்தனர்.
கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி கம்போஸ்ட் ஓடைத்தெரு, மிரண்டா லைன், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் தெருக்களில் வீதி உலா வந்தார்.
திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நகரில் உள்ள பெத்தாட்சி விநாகர் கோயில், என்.ஆர்.டி., நகர் சிவகணேச கந்த பெருமாள் கோயில்களில் உள்ள முருகன் சன்னதியில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
வீரபாண்டியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கவுமாரியம்மன் கோவில் வீட்டில் இருந்து கோயிலுக்கு பால்குட ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து கவுமாரியம்மனுக்கு பாலபிஷேகம், பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. கவுமாரியம்மன் சேவா சங்க நிர்வாகிகள் காமுத்துரை, மாரிச்சாமி உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.
போடி: சுப்பிரமணியர்சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று முருகன், வள்ளி, தெய்வானைக்கு தங்க கவச அலங்காரத்தில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.
பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில், செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். காலையில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர். முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன.
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை 5:00 மணி முதல் ஏராளமான பக்தர்கள் கோயிலிக்கு வந்தனர். 108 சங்காபிஷேகம் நடந்தது. பாலசுப்பிரமணியருக்கு பாலாபிஷேகம் நடந்தது. உற்ஸவர் பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி சதுர் வேத விநாயகர் கோயில் வளாகத்திலுள்ள சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு வள்ளி தெய்வானையுடன் கூடிய சுவாமிக்கு பல்வேறு வகை அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் விசாக நாளில் முருகன் பாடல்களுடன் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.