/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒர்க் ஷாப்பில் தீ விபத்து வேன், 3 கார்கள் சேதம்
/
ஒர்க் ஷாப்பில் தீ விபத்து வேன், 3 கார்கள் சேதம்
ADDED : அக் 19, 2024 04:53 AM

கம்பம், கம்பம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு நிறுத்தி வைத்திருந்த கார், டெம்போ டிராவல் வேன் முழுவதும் எரிந்து சேதமானது. மேலும் இரு கார்கள் சேதமடைந்தன.
கம்பம் நகராட்சி அலுவலகத்தை ஒட்டியுள்ள வீதியில் கார்கள் பழுது நீக்கும் மெக்கானிக் ஒர்க் ஷாப்பை கேரளா,வண்டிப் பெரியாறை சேர்ந்த அனிஸ் நடத்தி வருகிறார். இங்கு 8 கார்கள், ஒரு டெம்போ டிராவல் வேன் நிறுத்தப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் இரவு அந்த வேனில் பழுது நீக்கும் பணி நடந்துள்ளது.
பின்னர் ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
நேற்று அதிகாலை அந்த வேன் பேட்டரி ஒயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அதில் தீ பற்றியது. பின்னர் மளமளவென பற்றி எரிந்ததில் வேன் முற்றிலும் எரிந்தது.
அருகில் இருந்த காரும் முழுவதும் எரிந்தது. அடுத்தடுத்து இரு கார்கள் லேசான சேதம் அடைந்தது.
கம்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜலட்சுமி, சிறப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இதனால் நிறுத்தியிருந்த மற்ற கார்களுக்கும் தீ பரவுவது தடுக்கப்பட்டது. கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

