/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டம்டம் பாறை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 19 பேர் காயம்
/
டம்டம் பாறை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 19 பேர் காயம்
டம்டம் பாறை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 19 பேர் காயம்
டம்டம் பாறை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 19 பேர் காயம்
ADDED : ஜன 15, 2024 11:23 PM
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே டம் டம் பாறை 5வது வளைவில் வேன் கவிழ்ந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த 19 பேர் காயம் அடைந்தனர்.
சென்னை பாடியைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா 37. இவரது உறவினர் வீட்டு திருமணம் கம்பத்தில் நேற்று (ஜன.,15ல்) நடந்தது. முன்னதாக திருமண விழாவில் பங்கேற்க ஷேக் அப்துல்லா தனது உறவினர்களுடன் ஜன.,12ல் சென்னையில் இருந்து வேனில் 28 பேர் புறப்பட்டனர்.
வேனை அப்துல்லா உறவினர் முகமதுசித்திக் 37, ஓட்டினார். ஜன.,12 மாலையில் கொடைக்கானல் வந்தனர். அங்கு தங்கி சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிட்டு, திருமண விழாவில் பங்கேற்க நேற்று முன்தினம் ஜன.,14ல் கொடைக்கானலில் இருந்து கம்பம் சென்றனர். அப்போது இரவு 9:00 மணிக்கு டம்டம் பாறை 5 வது வளைவு இறக்கத்தில் வேன் பிரேக் பிடிக்கவில்லை. முகமது சித்திக் சமயோசிதமாக வேனை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் வேன் பள்ளத்தில் கவிழ்வது தடுக்கப்பட்டு, ரோட்டில் கவிழ்ந்தது. இதில் முகம்மது சித்திக், அனாஸ் பாத்திமா உட்பட 9 பேர் பெரியகுளம் அரசு மருத்துவமனையிலும், ஷேக் அப்துல்லா, ஷிபானா உட்பட 10 பேர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியிலும் அனுமதிக்கப்பட்டனர். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.--