/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டியில் வந்தே மாதரம் கொண்டாட்டம்
/
ஆண்டிபட்டியில் வந்தே மாதரம் கொண்டாட்டம்
ADDED : நவ 08, 2025 01:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் பா.ஜ.,சார்பில் வந்தே மாதரம் பாடலுக்கான 150ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
வந்தே மாதரம் பாடப்பட்டு 150 ஆண்டு முடிந்த நிலையில் இதனை பா.ஜ.,னர் விழாவாக கொண்டாடுகின்றனர். ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே பாரத மாதா வேடம் அணிந்த சிறுமி தேசியக் கொடி ஏந்திய நிலையில் பா.ஜ., வினர் வந்தே மாதரம் பாடலை பாடினர்.
ஆண்டிபட்டி நகர் தலைவர் மனோஜ்குமார் தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர்கள் குமார், லிங்கப்பன், பாலு, மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, தெற்கு மண்டல பார்வையாளர் ரமேஷ், நகர் துணைத் தலைவர் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

