
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வருவாய் கிராம உதவியாளருக்கு வழங்குவது போல் ரூ.6750 குடும்ப ஓய்வூதியமாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்நடந்தது.
மாவட்டத் தலைவர் தங்கமீனா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் அமுதா, மாவட்ட துணை தலைவர்கள் குமரன், சாந்தி, மாவட்ட இணைச் செயலாளர்கள் சீலாதேவி, ஜெயபாண்டி, ஜெயமேரி, மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரி பங்கேற்றனர். நிர்வாகிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

