/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஒத்திவைப்பு
/
வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஒத்திவைப்பு
வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஒத்திவைப்பு
வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஒத்திவைப்பு
ADDED : பிப் 09, 2025 05:34 AM
போடி: போடி அருகே உப்புக்கோட்டை வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது சம்பந்தமாக நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் கும்பாபிஷேக நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
போடி அருகே உப்புக்கோட்டையில் வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்து உள்ளது. இக்கோயில் 10 சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சித்திரை திருவிழா, அழகர் ஆற்றில் இறங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகம் நாளை பிப். 10 ல் நடக்க இருந்தது.
இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனி நபரால் மதுரை உயர்நீதிமன்றத்தில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவு பெறப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோயில் முன்பாக நேற்று முற்றுகையிட்டனர்.
இதனையொட்டி ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி தலைமையில், வீரபாண்டி இன்ஸ்பெக்டர் சண்முகநாதன், எஸ்.ஐ., அசோக், வருவாய் ஆய்வாளர் அன்புச் செல்வி, வி.ஏ.ஓ., முத்துமணி உள்ளிட்டோர் அப்பகுதி மக்களிடம் அமைதி பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தையில் கும்பாபிஷேகம் நடத்துவது சம்பந்தமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததால் மக்கள் கலைந்து சென்றனர்.

