ADDED : மார் 17, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அரசு போக்குவரத்து டெப்போ அருகே வி.சி., கட்சியினர், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பா.ஜ., வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிழக்கு மாவட்ட செயலாளர் ரபீக் தலைமை வகித்தார்.
மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன், மதுரை மண்டல முன்னாள் செயலாளர் கலைவாணன், மேற்கு மாவட்ட செயலாளர் மதன், மாநில துணைச் செயலாளர் தமிழன், மண்டலத் துணைச் செயலாளர் சுருளி, முன்னாள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் செல்லத்தம்பி, சட்டசபை தொகுதி செயலாளர்கள் சுசிதமிழ்பாண்டியன், ஆண்டவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் நூர் முகமது, அகமது முஸ்தபா உட்பட பலர் பங்கேற்றனர்.

