ADDED : டிச 22, 2024 09:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் பழைய பஸ் ஸ்டாண்ட்,அம்பேத்கர் சிலை முன்பு, அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சட்டசபை தொகுதி செயலாளர் சுசிதமிழ்பாண்டியன் , கிழக்கு மாவட்டச் செயலாளர் ரபீக், மண்டலச் செயலாளர் தமிழ்வாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.